2,000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கு... திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல்!

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள்
டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள்

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பின்னால் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நிரந்தமாக நீக்கப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் ரூ.2,000 கோடி வரை கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வீட்டுக்கு சீல் வைப்பு
வீட்டுக்கு சீல் வைப்பு

இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சம்மன் ஒட்டிய நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால் ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in