பரபரப்பு... முதன் முறையாக பரந்தூர் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு!

பரந்தூர் போராட்டக்காரர்கள்
பரந்தூர் போராட்டக்காரர்கள்

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் மீது முதல் முறையாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்ததூர் அருகே இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் 433 நாட்களாக பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரந்தூர் பகுதியில் ஐஐடி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரந்தூர் போராட்டக்காரர்கள்
பரந்தூர் போராட்டக்காரர்கள்

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 400 நாட்களுக்கு மேலாக போராடி வந்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில் முதன் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டதால் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in