
அமிர்தசரஸில் அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார் டூவீலரில் மோதிய விபத்தில் தேசிய கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் சர்தாஜ் சிங். தேசிய அளவிலான கால்பந்து வீரரான இவர், தனது சகோதரருக்காக சந்தையில் ரொட்டி விநியோகம் செய்து வந்தார்.
இந்த நிலையில், இன்று டூவீலரில் சந்தைக்கு டூவீலரில் சர்தாஜ் சிங் ரொட்டி கொண்டு சென்றார். அப்போது கல்சாயா பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், சர்தாஜ் சிங் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சர்தாஜ் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சர்தாஜ் சிங் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார் மோதி கால்பந்து வீரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்