ஆன்லைனில் 22,000 ரூபாய்க்கு செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் கிடைத்த கற்கள்... பதறவைத்த ஃபிளிப்கார்ட்

ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட்

ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ.22,548 மதிப்பிலான மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் கற்கள் கிடைத்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை பொதுவெளியில் இழுத்து நியாயம் கேட்டுள்ளார்.

இந்தியாவில் இ-காமர்ஸ் துறையானது அபரிமிதமான வளர்ச்சியினை அடைந்துள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சந்தைகள் பெரும் லாபம் சம்பாதித்து வருகின்றன. மின் வணிகம் குறித்து அறிந்திராதவர்களைக் கூட, கொரோனா காலம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்டில் பொருட்களை வாங்க வைத்தது.

செல்போன் பார்சலில் வந்த கல்
செல்போன் பார்சலில் வந்த கல்

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது வசதியாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஹோம் டெலிவரி, தள்ளுபடி விலையில் தயாரிப்புகள் கிடைப்பது, நேரம் பெரிதும் மிச்சமாவது, பயண சிரமம் குறைவது ஆகியவை மின் வணிகத்தின் மீதான ஆர்வத்தை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ளன.

ஆனபோதும் ஆன்லைன் வர்த்தகத்தில் கிடைக்கும் பொருட்கள் அதிர்ச்சி அளிக்கவும் கூடும். கேட்டது ஒன்று கிடைப்பது மற்றொன்றாகவோ, முற்றிலும் தொடர்பற்றதாகவோ, காலாவதியானது அல்லது பயனற்றதாகவோ அவை அமையவும் வாய்ப்புண்டு. காஜியாபாத்தை சேர்ந்த ஒருவருக்கு செல்போனுக்கு பதிலாக பார்சலில் கிடைத்த கற்கள் இந்த வகையில் சேரும்.

ஃபிளிப்கார்ட் தளத்தில் ரூ22,548 ரூபாய்க்கு லேட்டஸ்ட் மாடல் மொபைல் போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் கற்கள் கிடைத்ததில் கடுப்பானார். உடனடியாக, சமூக ஊடகப் பஞ்சாயத்துகளுக்கு பேர் போன எக்ஸ் தளத்தில் ஃபிளிப்கார்ட்டை சந்திக்கு இழுத்தார். அபிஷேக் பட்னி என்ற அந்த காஸியபாத் வாடிக்கையாளர், ஆன்லைனில் தான் ஆர்டர் செய்த மொபைல் போனுக்கான விவரங்களையும், தனக்கு மோசடியாக கிடைத்த கற்களையும் புகைப்படமாக எக்ஸ் தளத்தில் பந்திவைத்தார்.

பதறிப்போன ஃபிளிப்கார்ட் நிறுவனம் உடனே அங்கே ஆஜராகி அபிஷேக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பொதுவெளியில் தனது பேர் கெடுவதை உணர்ந்து, வாங்க தனியா பேசலாம் என தனிப்பட்ட உரையாடலின் மூலம் பிரச்சினையை தீர்க்க முயன்றது. அந்த பிரச்சினை எவ்வாறு தீர்ந்தது, அபிஷேக் கோரிய மொபைல் போன் முறைப்படி வந்து சேர்ந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் பயனர்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த மற்றும் தாங்கள் அறிந்த இ-காமர்ஸ் மோசடி அனுபவங்களை எக்ஸ் தளத்தில் சுடச்சுட பரிமாறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in