அதிர்ச்சி! வேலை செய்த நிறுவனத்தில் மென்பொருள் திருட்டு; கைவரிசை காட்டிய 5 பொறியாளர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

தாங்கள் வேலை பார்த்த நிறுவனத்தின் மென்பொருள் தகவல்களை திருடி, சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க முயற்சித்த  மென்பொருள் பொறியாளர்கள் ஐந்து பேர்  அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் செயல்படும் குறிப்பிட்ட ஒரு  தனியார் மென்பொருள் நிறுவனத்தின் நிதி மேலாளர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் "நாங்கள் 'அமேசான் வெப் சர்வீஸ் மூலம் சாப்ட்வேர்களை தயாரித்து, வங்கிகளுக்கு கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். இந்த சாப்ட்வேர்களின் ரகசியத்தை எங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிலர் திருடி உள்ளார்கள்.

இந்த விஷயம் எங்களுடைய வாடிக்கையாளர்கள் மூலம் தெரியவந்தது. நாங்கள் தயாரிக்கும் சாப்ட்வேர்களின் ரகசியத்தை திருடிய அவர்கள், தனியாக கம்பெனி தொடங்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடியாக கருதுகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட பணியாளர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார். 

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவர்களின் விசாரணையில் ஐந்து பேருக்கு இதில்  தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாப்ட்வேர்களை  திருடி மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த எடிசன் (29), ராம்குமார் (29), ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த காவ்யா (29), பெங்களூருவைச் சேர்ந்த ரவீதா (40), புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த கருப்பையா (26) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் புகார் கொடுத்த நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாக  பணியாற்றியவர்கள் என்பதும்,  இதில் எடிசன் என்பவர்தான் மூளையாக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் மென்பொருள் துறையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இதையும் வாசிக்கலாமே... HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in