
டெல்லியில் பெண் பத்திரிகையாளர் சவுமியா விஸ்வநாதன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த, சவுமியா விஸ்வநாதன் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு செப். 30ல் வசந்த் கன்ஜ் பகுதியில் காரில் இறந்த நிலையில் கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டெல்லி போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர்.
தடயங்களின் அடிப்படையில் கொலை தொடர்பாக 2009ம் ஆண்டில் ரவி கபூர், அமித் சுக்லா, அஜய் குமார், பல்ஜீத் மாலிக், அஜய் செதி ஆகிய ஐந்து பேர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு டெல்லியின் சாகெட் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார்.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!