
வசதியானவர்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களுக்கு இன்று கார் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலும் நடுத்தர மக்கள் தேர்வு செய்வது 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள் வரும் கார்களைத்தான். ஆனால், இந்த கார்கள் தான் அதிக அளவு வாகன திருட்டு கும்பலின் சாய்ஸ்சாகவும் உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் திருடப்படுகின்றன. அதில் 56 சதவீத கார்கள் டெல்லியில் திருப்படுவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சரி என்னென்ன கார்கள் திருடர்களின் சாய்ஸாக உள்ளது என பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது. அதில் டாப் 5 கார்கள் எவை என பார்ப்போம்.
இந்தியாவில் திருடுப்போகும் கார்களில் முன்னணியில் இருப்பது மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்கள். கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல், அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த கார் மைலேஜ், விலை குறைவு என பல பிளஸ்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்தாலும், திருடர்களுக்கு இந்தக் காரின் மறுவிற்பனை விலை அதிகம் என்பதுதான் காரணம் என்கிறார்கள்.
இரண்டாம் இடத்திலும் மாருதியின் சுசூகி வாகன்ஆர் கார்கள். மாருதி கார்களிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் என்றால் இந்த மாடல் தான் என்கின்றனர். குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற இந்த கார்களைத் திருடர்களும் விரும்ப காரணம் குறைந்த விலை, மறு விற்பனையிலும் எப்போதும் மோஸ்ட் வான்டட்.
மூன்றாம் இடத்தில் இருப்பது ஹூண்டாய் க்ரெட்டா கார். குடும்பத்தினர் பயணிக்க கார் வாங்குவோரின் சிறந்த தேர்வாக இது இருக்குமாம். இரண்டு எஞ்சின் ஆப்ஷனோடு வருவதால் இதற்கு சந்தையில் அதிக தேவை இருக்கிறதாக கூறப்படுகிறது. எஸ்யூவி கார்களில் அதிகம் விற்பனையாகும் மாடலாக இந்த ஹூண்டாய் க்ரெட்டா விளங்குகிறது.
நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது போல அதிகம் திருடப்படும் கார்களிலும் இது முன்னணியில் இருக்கிறது. இந்த மாடல் கார் பெரும்பாலும் உதிரி பாகங்களுக்காகவே திருடப்படுகிறது என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
நான்காவது இடத்தில் இருக்கும் கார் ஹூண்டாய் சாண்ட்ரோ, இந்த காரும் விலை குறைவாக குடும்பத்திற்கு ஏற்ற காராக உள்ளது. பிரீமியம் வகை கார்களில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் கார்களில் இதுவே முன்னனியில் இருக்கிறது. இந்த கார்கள் மறு விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் இரண்டிற்காகவும் திருடப்படுகின்றன
ஐந்தாம் இடத்தில் இருப்பது ஹோண்டா சிட்டி கார்கள். ஹோண்டா நிறுவனத்தின் கார்களிலேயே அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்றால் அது இதுதான் என்கின்றனர். 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காருக்கு இன்று வரை மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இந்த கார்களை திருடர்கள் குறிவைப்பதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஏன் இந்த வகையான கார்களை திருடர்கள் குறிவைக்கின்றனர் என்ற கேள்விக்கு அதிகம் விற்பனையாகி, சாலைகளில் அதிகம் செல்லும் வாகனங்களை திருடும்போது திருடர்களைப் பிடிப்பதில் காவல்துறைக்கு சற்று சவாலாக இருக்கும். இதனால், அதிகம் விற்பனையாகும் மாடல்களை திருடர்களும் திருடுகிறார்கள், அதனை விற்பனை செய்வதும் எளிதாக இருக்கும் என்றும் காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன.
கார் வாங்குவது மட்டுமல்லா அதனை பாதுகாப்பாக நிறுத்துவதும் கூட இன்றைய சூழலில் அவசியமாகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு