அதிர்ச்சி! கோயில் தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்! கழிவு நீர் கலப்பதால் விபரீதம்

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சி நகர் பகுதியில் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இங்கு மாரியம்மன் கோயில் உற்சவங்களின் போது, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தருணங்களிலும் தெப்பக்குளத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குளத்து நீரில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறப்பு என தகவல்
குளத்து நீரில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறப்பு என தகவல்

வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், தியாகராயர் கல்லூரி அருகே பம்புகள் மூலம் இறைக்கப்பட்டு இந்த தெப்பக்குளத்திற்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது மதுரை மாநகரில் வைகை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கலப்பதால் இந்த தண்ணீர் அசுத்தம் அடைந்து வருகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் குளத்து நீரில் தேங்கியிருப்பதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது.

குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதனால் பெரும்பாலான மக்கள் தெப்பக்குளத்தில் கால்வைப்பதையே விரும்புவதில்லை. இந்த நிலையில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. தெப்பக்குளத்தில் உள்ள நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி தூய நீரை குளத்தில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த மீன்களை அகற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in