தரைமட்டமான பட்டாசு ஆலை: பறிபோன உயிர்

சாத்தூர் அருகே சோகம்
தரைமட்டமான பட்டாசு ஆலை: பறிபோன உயிர்
தரைமட்டமான கட்டிடம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பலியானார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த பிரம்மனுக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதில் நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று மாலை, வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் பட்டாசு உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது.

இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த அமீர்பாளையத்தைச் சேர்ந்த கணேசன்(20) என்ற தொழிலாளி கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ராமர் என்ற தொழிலாளி தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த வெடிவிபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in