
பட்டாசு வெடித்தபோது தீப்பொறிப்பட்டு 4 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்து அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்து ஜல்லடியன்பேட்டை, ஆஞ்சநேயர் நகரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது பட்டாசு தீப்பொறி பறந்து அதே தெருவில் வசித்து வரும் மாரி(47) என்பவரின் கூரை வீட்டின் மீது விழுந்து தீ பற்றியது. இதைப்பார்த்த மாரி குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தீயை அணைக்க முயன்றதுடன் தீயணைப்புதுறை மற்றும் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
அதற்குள் தீ மளமளவென எரிந்து அருகே உள்ள 4 குடிசை வீடுகளுக்கு தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 4 வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, ரேஷன் அட்டை, சான்றிதழ்கள், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. தீ விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!