பராமரிப்பின் போது பற்றி எரிந்த ரயில்... அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

ஒடிசா ரயில் பெட்டியில் தீ
ஒடிசா ரயில் பெட்டியில் தீ

ஒடிசாவில் டிப்போவில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புரி நகரில் உள்ள ரயில்வே டிப்போவிற்கு பராமரிப்பிற்காக பயணிகள் ரயில் ஒன்று வந்தது. இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ரயில் பெட்டிகள் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரம், ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றியது. மளமளவெனப் பற்றிய தீ, பெட்டி முழுமைக்கு பரவியது. அதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். உடனடியாக அதிகாரிகள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் ரயில்வே ஊழியர்கள் தீப்பற்றிய பெட்டியை, மற்ற ரயில் பெட்டிகளுடன் இருந்து பிரித்தனர். இதனால், தீயால் ஏற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஒடிசா ரயில் பெட்டியில் தீ
ஒடிசா ரயில் பெட்டியில் தீ

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும் இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தியதில், ரயில் பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பேட்டி மூலம் தீ பற்றியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பேட்டரியை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்று கிழக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!

நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!

பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!

ரூ.40 லட்சம் மதிப்புள்ள இறால்கள் மடிந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in