தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் திடீரென எழுந்த கரும்புகை
தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் திடீரென எழுந்த கரும்புகை

தனியார் கல்லூரியில் திடீரென எழுந்த கரும்புகை - அலறியடித்து ஓடிய மாணவர்கள்

கோவை அடுத்த சூலூர் அருகே தனியார் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் தீப்பிடித்து திடீரென கரும்புகை வெளியேறியதால், அச்சமடைந்த மாணவர்கள் உடனடியாக வகுப்புகளை விட்டு வெளியேறினர்.

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் ஜான்சன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிட்டோரியம் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் கருமத்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தீவிபத்தால் கரும்புகை சூழ்ந்ததால் மாணவர்கள் வெளியேறினர்
தீவிபத்தால் கரும்புகை சூழ்ந்ததால் மாணவர்கள் வெளியேறினர்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 3 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறையினர்
தீயணைப்புத்துறையினர்

சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த திடீர் தீ விபத்து காரணமாக கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in