கணவன் சந்தேகப்பார்வை... பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

கணவன் சந்தேகப்பார்வை... பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

குடும்பத்தகராறில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துர்கா.இவர் 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து விருதுநகரில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் தபால் துறையில் பணியாற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் துர்காவுக்கும் பள்ளிக்கரணையில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவர் காளிதாஸுக்கு தெரியவர, அவர் துர்காவை பணிக்கு செல்லவேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு துர்கா மாற்றலாகி வந்துள்ளார். பின்னர் ராயப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்த துர்கா அவரது கணவர் காளிதாஸ் உடன் சேர்ந்து வாழவேண்டும் என்றும் கூறி அவரது தாயார் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் துர்காவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் துர்கா விசாரணைக்கு ஆஜராகாததால் செம்மஞ்சேரி போலீஸார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து கூறி வந்தனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த துர்கா நேற்று இரவு தனது பெண் தோழிக்கு தகவல் தெரிவித்துவிட்டு மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரது பெண் தோழி, அண்ணாசாலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் விரைந்து சென்று துர்காவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு துர்கா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, அண்ணாசாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in