பாலியல் தொல்லை... பணத்தை பறித்துவிட்டார்- சாமியார் மீது பெண் சாமியார் புகார்

பெண் சாமியார் பவித்ரா
பெண் சாமியார் பவித்ரா

தன்னை சிவன் அவதாரம் என கூறி பாலியல் தொல்லை கொடுத்து, பணம் பறித்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் சாமியார் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த பெண் சாமியார் பவித்ரா. இவர் இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு சென்று தர்மம் செய்தற்காக தர்மச்சாரியா பட்டம் பெற்றவர். தன்னை காளி அவதாரம் எனக்கூறி வலம் வந்த பவித்ராவை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் நிலக்கோட்டை காவல்துறையினர் நில மோசடி விவகாரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பெண் சாமியார் பவித்ரா டிஜிபி அலுவலகத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், திண்டுக்கல் மாவட்டம் வீலி நாயக்கன்பட்டியில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் தவயோகி தேவபாரதி திருஞானம் என்பவர் தன்னை காளி அவதாரம் என்றும் சிவன் அவதாரம் என்றும் கூறி மனதை மயக்கி பாலியல் தொல்லை கொடுத்து, பணம் பறித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சாமியார் தவயோகி தேவபாரதி திருஞானம்
சாமியார் தவயோகி தேவபாரதி திருஞானம்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெண் சாமியார் பவித்ரா, "தான் தர்மாச்சாரியா பட்டம் பெற்றிருப்பதால் அதிருஷ்டம் தன்னிடம் இருப்பதாக எண்ணி கர்நாடக, பாண்டிச்சேரி, உத்தராகண்ட் முதலமைச்சர், பாலிவுட் நடிகர் சோனு சூட் உட்பட பல உயரதிகாரிகள் தன்னிடம் ஆசி பெற்று சென்றனர். சிவன் அவதாரம் என கூறி கொள்ளும் திருஞானம் என்ற சாமியாரிடம் மன அமைதிக்காக சென்றபோது அவர் தன்னை மனவசியம் செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததுடன் தன்னை ஏமாற்றி பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் சாமியார் திருஞானம் சட்டவிரோதமாக புலித்தோல், மான் தோல், மயில், போதை பொருள் விற்பனை செய்து வருகிறார். நூறு வருடம் வாழ வேண்டி மயிலை கொன்று அதன் ரத்தத்தை தினமும் பருகி வருகிறார். இந்த சட்டவிரோத செயல் குறித்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்டோருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துடன், அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தன் மீது நில மோசடி செய்ததாக பொய் புகார் கொடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வைத்தேன். தன் மீது போடப்பட்ட பொய் வழக்கு குறித்து 98 ஐஏஎஸ், 98 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளேன்.

சிவன் அவதாரம் என சொல்லிக்கொள்ளும் சாமியார் திருஞானம் தன்னுடன் வருமாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான ஆடியோ ஆதாரங்களுடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். திருஞானத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலக்கோட்டை சார்பு ஆய்வாளர் தயாநிதி, ஆய்வாளர் குரு வெங்கட் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in