புளியரை சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக- கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் வாகன ஓட்டிகளிடம் அதிகளவில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து புளியரை சோதனைச் சாவடியில் சோதனைக்காக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்றனர்.
அப்பொழுது அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி பணி முடித்து தனது வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அந்த வாகனத்தை கற்குடி விலக்கில் மறித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வாகனத்தில் கட்டுக் கட்டாக கணக்கில் வராத ரொக்கப் பணம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் லஞ்சமாக பெற்ற முட்டை, உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
அத்துடன் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேம ஞானகுமாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விளக்கங்களை கேட்டறிந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து புளியரை சோதனைச் சாவடி போக்குவரத்து ஆய்வாளர் பிரேம ஞானகுமாரியை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். பணிநீக்க உத்தரவு திருநெல்வேலியில் வசித்து வரும் பிரேம ஞானகுமாரியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!
நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!
லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!