பகீர்... 54 சவரன் நகைகள் மாயம்; சிக்கிய எஸ்பிஐ வங்கியின் பெண் துப்புரவு பணியாளர்

கைது செய்யப்பட்ட பெண் துப்புரவு பணியாளர்
கைது செய்யப்பட்ட பெண் துப்புரவு பணியாளர்

எஸ்பிஐ வங்கியின் லாக்கரிலிருந்து 54 சவரன் தங்க நகைகளை திருடிய பெண் துப்புரவு பணியாளரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 6ம்தேதி அதிகாரிகள் தணிக்கை செய்து இருக்கிறார்கள். அப்போது வங்கியின் லாக்கரில் இருந்த அடகு வைத்த வாடிக்கையாளர்களின் 54 சவரன் நகைகள் மாயமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதே வங்கியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த லூர்து மேரி என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் லூர்து மேரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திருடியது தெரியவந்திருக்கிறது. பின்னர் இந்த நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in