பெலிக்ஸ் ஜெரால்டு உயிருக்கு போலீஸாரால் ஆபத்து... மனைவி கண்ணீர்!

பெலிக்ஸ் ஜெரால்டு  மனைவி
பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி

போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு  உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பெலிக்ஸ் ஜெரால்டு
பெலிக்ஸ் ஜெரால்டு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை  போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்திய நிலையில் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டது. பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீது தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேசன் பாபு,  பெண் காவலர்கள் குறித்து இழிவாக விவாதம் நடத்திய பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். யூடியூப் சேனல்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் இந்த வழக்கில் அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என்று தனது கருத்தையும்  பதிவு செய்தார். இந்த வழக்கில் மனுதாரருக்கு தற்போது இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்க முடியாது எனக் கூறி காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒரு வார காலம் ஒத்தி வைத்தார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் இருந்த அவரை கடந்த பத்தாம் தேதி இரவு தமிழக போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் இன்னும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படாததால் அவருக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

'கடந்த பத்தாம் தேதி இரவு அவருக்கு அலைபேசி மூலம் பலமுறை அழைத்தபோது அவர் எடுக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் எடுத்து, தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதையடுத்து அருகில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் போனை கொடுத்தார். அவரிடம் எதற்காக எனது கணவரை கைது செய்திருக்கிறீர்கள் எப்போது ஊருக்கு  கொண்டு வருவீர்கள்?  என்று கேட்டபோது இரவு ரயிலில் வர முடியாது, அதனால்  மறுநாள் காலையில் ரயிலில் அவரை ஊருக்கு கொண்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர்.

மறுநாள் காலையில் தொடர்பு கொண்டபோது காலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினார்கள்.  அதன் பின்னர் பலமுறை அழைத்தும் அவர்கள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை. எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?,  எங்கே கொண்டு செல்கிறார்கள்?. என்னச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.  சவுக்கு சங்கரைப் போல எனது கணவரின் உயிருக்கும் போலீஸாரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது” என பெலிக்ஸ் ஜெரால்டுவின் மனைவி  தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in