உடுமலை அருகே வாயில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த புலி, முள்ளம்பன்றியுடன் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்து உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனப்பகுதியில் சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. இந்த புலியின் வாயில் காயங்கள் இருந்ததால், வேட்டையாட முயன்றவர்களின் பிடியில் சிக்காமல் புலி இருந்திருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதையடுத்து புலியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய, மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையிலான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து புலி உயிரிழந்த கிடந்த அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பிரேத பரிசோதனையில் புலியின் வாய் மட்டுமின்றி கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளிலும் முள்ளால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் முள்ளம்பன்றியை வேட்டையாடும் போது அதன் முட்களால், கால்கள், மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த காயம் காரணமாக உள்ளுக்குள்ளேயே சீல் பிடித்து வேட்டையாட முடியாமல், புலி இறந்திருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து புலியின் உடல் பாகங்கள் மேல்விசாரணைக்காக பதப்படுத்தப்பட்டு, பின்னர் புலியின் சடலம், பற்கள் மற்றும் நகங்கள் ஆகியவை வனப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு