பகீர்... மகளைப் பலாத்காரம் செய்த தந்தை... சில மணி நேரங்களிலே மின்சாரம் தாக்கி பலி!

பலாத்காரம்
பலாத்காரம்

14 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தை சில மணி நேரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், தேவாஸில் உள்ள விவசாய வயலில் ஒருவர் மயங்கிக் கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், "மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர், பத்தாம் வகுப்பு படிக்கும் தனது 14வயது மகளை குடிபோதையில் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். ரக்‌ஷாபந்தன் விழாவிற்காக மாணவியின் தாய், அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது தனது சகோதரனுடன், வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவியை அவரது தந்தை செப்.1-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் தனது தாய் வீட்டிற்குச் சென்ற மாணவி, தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தைச் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து அவரது தந்தை மீது சுதேகான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸில் புகார் அளித்தால், தற்கொலை செய்து கொள்வதாக மாணவியின் தந்தை குடும்பத்தினரை மிரட்டியுள்ளார்.

மின்சார தாக்குதல்
மின்சார தாக்குதல்

அவர்மீது 376(3), 506, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தான் மின்சாரம் தாக்கி குற்றம் சாட்டப்பட்டவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

குடிபோதையில் இருந்த அவர் மின்சார கம்பியைத் தொட்டு தற்கொலை செய்தாரா என விசாரித்து வருகிறோம்" என்றனர்.

மகளைப் பலாத்காரம் செய்த தந்தை சில மணி நேரங்களிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in