தந்தையால் பாலியல் டார்ச்சர்.. தற்கொலைக்கு முயன்ற மாணவி: சரியான நேரத்தில் காப்பாற்றிய தலைமையாசிரியை!

தந்தையால் பாலியல் டார்ச்சர்.. தற்கொலைக்கு முயன்ற மாணவி: சரியான நேரத்தில் காப்பாற்றிய தலைமையாசிரியை!

தந்தையின் பாலியல் தொந்தரவால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை தலைமையாசிரியை காப்பாற்றிய சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தனியார் பெண்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மூத்த மகளை அவரது தந்தை கடந்த மூன்று மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை தாய், தங்கையிடம் சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

தந்தையால் தொடரும் பாலியல் தொந்தரவைத் தாங்க முடியாமல் மாணவி, தற்கொலை செய்து கொள்வதற்காக கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக்குச் சென்ற போது அந்த கடிதம் தவறி கீழே விழுந்துள்ளது. அது அவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியையிடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயை வரழைத்து தலைமையாசிரியை விசாரித்தார். அப்போது, தனக்கு நடந்த கொடூரத்தைச் சொல்லி அந்த மாணவி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவியின் தந்தையை கைது செய்தனர். பெற்ற மகளை தந்தையே பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.