இளம்பெண்ணின் அந்தரங்கப் படங்களை வெளியிடுவேன்: மிரட்டிய வாலிபர் வெட்டிக் கொலை!

கைது செய்யப்பட்ட மஞ்சுநாத்
கைது செய்யப்பட்ட மஞ்சுநாத்

அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபரை வெட்டிக்கொலை செய்த இளம்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை
கொலை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். உணவு வினியோக முகவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை இவரது வீட்டில் டேவிட்(21) என்ற வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த தகவல் அங்கு விரைந்த அசோக் நகர் போலீஸார், விசாரணை நடத்தினர்.

அப்போது நடத்திய விசாரணையில், மஞ்சுநாத்தின் மகளுடன் டேவிட் பழகியுள்ளார். அப்போது நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவ்வப்போது காட்டி சமூக இணையதளங்களில் வெளியிட்டுவேன் என்று மஞ்சுநாத்தின் மகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன் துன்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது தந்தையிடம் மஞ்சுநாத்தின் மகள் சொல்லி அழுதுள்ளார். இந்த நிலையில், டேவிட்டை தொடர்பு கொண்ட மஞ்சுநாத், தனது வீட்டிற்கு வருமாறு நேற்று அழைத்துள்ளார்.

கொலை
கொலை

அங்கு வந்த டேவிட்டிடம் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை மஞ்சுநாத் கேட்டுள்ளார். ஆனால், டேவிட் அந்த புகைப்படங்களை தரமறுத்துள்ளார். இதனால் மஞ்சுநாத் டேவிட்டை வெட்டிப் படுகொலை செய்தார் என்பது தெரிய வந்தது.

கைது
கைது

இதையடுத்து டேவிட்டின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பினர். அப்போது தனது மகளைத் துன்புறுத்தியதற்காக டேவிட்டை கொன்றதாக மஞ்சுநாத் ஒப்புக்கொண்டதாக பெங்களூரு நகர குற்றப்பிரிவு டிசிபி சேகர் ஹெச். தெக்கன்னவர் கூறினார்.

இதையடுத்து மஞ்சுநாத்தை போலீஸார் கைது செய்தனர். மகளைத் துன்புறுத்திய வாலிபரை தந்தை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in