அதிக முதலீடு; இளைய மகளுக்கு பிரச்சினை... பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

எம்.பி.சுரேஷ்
எம்.பி.சுரேஷ்

கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்கங்களின் நகர தலைவரும், பிரபல தொழிலதிபருமான எம்.பி.சுரேஷ் நகைக் கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்று காலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு மற்றும் அவரது இளைய மகள் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டிற்கு வந்தது உள்ளிட்ட காரணங்களால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சுரேஷ் வணிகர் சங்க நகர தலைவர் என்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிருஷ்ணகிரியில் இன்று ஒருநாள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in