ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உயிரைப் பறித்தது `ஏசி'

மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி பலியான சோகம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உயிரைப் பறித்தது `ஏசி'

ஏசியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மாரியம்மன ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் பிரஷாந்த்- சந்திரகலா தம்பகுதிக்கு எஸ்.ஏ.அர்த்விக் என்ற மகனும், ப்ரேரனா என்ற மகளும் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று இரவு ஏசி போட்டு தூக்கியுள்ளனர். அதிகாலை திடீரென வீட்டில் இருந்த ஏசி வெடித்துள்ளது. இதில் வீடு முழுவதும் தீ பற்றியுள்ளது. இதையடுத்து, தூக்கத்தில் திடீரென விழித்துக் கொண்டவர்கள் வெளியே வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், வீடு முழுவதும் புகை சூழ்ந்ததால் அவர்களால் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வெங்கட் பிரஷாந்த் (42), சந்திரகலா (38), எஸ்.ஏ.அர்த்விக் (6), ப்ரேரனா (8) ஆகிய நான்கு பேரும் கருகிய நிலையில் கிடந்தனர். உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீப் பிடித்து விபத்துள்ளது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.