மதுரையில் போலி நீதிபதி கைது... சிபிஐ அதிரடி!

கைது செய்யப்பட்ட  பாண்டியன்
கைது செய்யப்பட்ட பாண்டியன்
Updated on
2 min read

உயர் நீதிமன்ற நீதிபதி எனக்கூறி அதிகாரிகளை மிரட்டியவரை மதுரையில் சிபிஐ போலீஸார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் பாண்டியன்(51). இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் தொழிற்சாலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தை தாட்கோ ரத்து செய்தது. இதை எதிர்த்து 2010-ம் ஆண்டு் பாண்டியன் ரிட் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் அவருக்கு இடம் வழங்க உத்தரவிட்டது. இதைதொடர்ந்து இடத்திற்கு ரூ.11 லட்சம் செலுத்துமாறு பாண்டியனுக்கு தாட்கோ நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆரம்பத்தில் ரூ.1.5 லட்சத்திற்கு இடம் கொடுத்த தாட்கோ தற்போது அதே இடத்திற்கு ரூ.11 லட்சம் கேட்டதால் தனக்கு சண்டிகர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பயிற்சி பெற கடிதம் வந்துள்ளது. எனவே அதன் அடிப்படையிலாவது தொகையைக் குறைக்க வேண்டும் என தாட்கோவுக்கு பாண்டியன் கடிதம் எழுதினார். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கைது
கைது

இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இவ்வழக்கை இன்னும் இவ்வளவு நாள் நடத்தி வருகிறீர்கள். சமரசம் செய்து கொள்ளலாமே எனக் கேட்டார். அதற்கு தாட்கோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாண்டியன் தன்னை நீதிபதி எனக்கூறி மிரட்டுகிறார் எனக்கூறினார்,

இனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி புகழேந்தி, பாண்டியனின் நீதிபதி குறித்த உண்மைத் தன்மையை அறிய சிபிஐக்கு உத்தரவிட்டார். இதையடுத்து டிஎஸ்பி தண்டபாணி தலைமையிலான அதிகாரிகள் பாண்டியனிடம் விசாரித்தனர். அவர் பெங்களூருவில் எல்எல்பி சட்டப்படிப்பை முடித்து சண்டிகரில் பயிற்சி பெற்று வருவது தெரிந்தது.

இதையடுத்து நீதிபதி பயிற்சி பெறுவது குறித்த கடிதத்தின் உண்மைத் தன்மையை அறிய சண்டிகர் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பாண்டியன் தெரிவித்தார். எனினும் நீதிபதி எனக்கூறி மோசடி செய்ய முயன்றதாக அவரை சிபிஐ போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரையில் போலி நீதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in