மும்பையில் போலி ‘ஃபெவி க்விக்’ தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 10,29 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சகினாகா காவல் நிலையத்திற்குட்பட்ட ஒரு இடத்தில் போலி ‘ஃபெவி க்விக்’ தயாரிப்பு ஆலை இயங்குவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார், சம்பவ இடத்தில் சோதனையிட்டனர்.
அப்போது ‘ஃபெவி க்விக்’ என்ற பெயரில் போலியாக பசை கண்டுபிடிக்கப்பட்டது. ரூ. 10.29 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், 2 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக மும்பை காவல்துறை குற்றப்பிரிவு போலீஸார், ஹனுமான் பிரகாஷ் குப்தா(54) என்பவரை கைது செய்தனர். அவர் மீது 420, 486 மற்றும் 488 மற்றும் பதிப்புரிமைச் சட்டம் 1957-ன் பிரிவு 51 மற்றும் 63 ஆகியவற்றின் கீழ் சகினாகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவு பிரிவு போலீஸார், இரண்டு போலி தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து போலி சீரகம், கருப்பு மிளகு மற்றும் 40 டன் மூலப்பொருட்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.