பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

விருதுநகர் அருகே 3 பேர் படுகாயம்
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
தீயணைப்புத்துறையினர் தீயை பரவாமல் அணைத்தனர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். மருந்து கலவை அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் 2 அறைகளில் தீ பரவியது. இதில் குணவதி, பேபி, பொண்ணு ஆகிய மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீ பரவிய அறையில் தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
தீ பரவிய அறையில் தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் மேலும் தீ பரவ விடாமல் அணைத்தனர். இந்த வெடிவிபத்தில் 2 அறைகள் சேதமடைந்தன. குத்தகைக்கு பட்டாசு ஆலைகளை இயக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், இந்த பட்டாசு ஆலை அப்படி இயக்கப்பட்டதா என வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.