
மைசூர் அரண்மனையில் தசரா விழாவுக்காக நடைபெற்ற பீரங்கி பயிற்சியின் போது பீரங்கி குண்டு வெடித்து ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்திய முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மைசூரில் தசரா ஒத்திகையின் ஒரு பகுதியாக பீரங்கி பயிற்சி நடைபெற்றது. அப்போது பீரங்கி குண்டுகள் வெடித்து சிதறியதால் அங்கிருந்தவர்கள் நாலாபுரமும் சிதறி ஓடினர்.
இந்த விபத்தில் காராயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.