தூத்துக்குடியில் பரபரப்பு... சுற்றுலா வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து!

தூத்துக்குடியில் பரபரப்பு... சுற்றுலா வேன் கவிழ்ந்து பயங்கர விபத்து!

தூத்துக்குடியில் சுற்றுலா வேனின் முன்பக்க டயர் வெடித்ததில் அந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வேனில் பயணித்த 15 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாளையம் பகுதியில் இருந்து 15 பேர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக சுற்றுலா வேன் மூலம் புறப்பட்டு சென்றனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மதுரை புறவழிச்சாலையில் இன்று காலை வந்த போது சுற்றுலா வேன் திடீரென முன்பக்க டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து உருண்டது.

இதில் வாகனத்தில் வந்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீஸார், சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in