அலுவலக வாட்ஸ்அப் குரூப்பில் விழுந்த ஆபாசப்படம்... பதறிய பெண் ஊழியர்கள்: சிக்கிய கலால் அதிகாரி

அலுவலக வாட்ஸ்அப் குரூப்பில் விழுந்த ஆபாசப்படம்... பதறிய பெண் ஊழியர்கள்: சிக்கிய கலால் அதிகாரி

மத்தியப் பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தில் அதிகாரப்பூர்வ அலுவலகக் குழுவில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டதால், கலால் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக பேசிய கந்த்வா மாவட்ட கலால் அதிகாரி விகாஸ் மண்ட்லோய், "உதவி மாவட்ட கலால் அதிகாரி ஆர்.பி.அஹிர்வார், மே 23 அன்று மாலை 6:15 மணிக்கு கலால் துறையின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளார். 24 மணி நேரத்திற்குப் பிறகு அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியினால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அந்த அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு, அவரது தகாத நடத்தைக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இடைநீக்கம் செய்யப்பட்ட அந்த அதிகாரி, "நான் அந்த வீடியோவை பகிரவில்லை. நான் அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, ​​யாரோ ஒருவர் எனது தொலைபேசியைப் பயன்படுத்தி வீடியோவைப் பகிர்ந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in