3 கொலைகள்... தான் இறந்ததாக ஜோடிப்பு... ஆள்மாறாட்டம்... 20 வருடமாக போலீஸை ஏமாற்றியவர் 60 வயதில் கைது!

கைது
கைது

3 கொலைகளை செய்ததுடன், தனது இறப்பை ஜோடித்து போலீஸாரை ஏமாற்றிய முன்னாள் கடற்படை பணியாளர், தனது 60 வயதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஹரியானா மாநிலம் பானிபட்டை பூர்வீகமாகக் கொண்ட பாலேஷ் குமார், 8-ம் வகுப்பு வரை படித்தவர். 1981-ம் ஆண்டு, இந்தியக் கடற்படையில் பணியாளராக சேர்ந்து, 1996-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

2004-ம் ஆண்டு டெல்லியின் பவானா பகுதியில் வசித்து வந்தபோது, தனது மைத்துனரான ராஜேஷ் என்கிற குஷிராமை பாலேஷ் கொன்றார். அப்போது பாலேஷுக்கு வயது 40. ராஜேஷ் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தது மற்றும் பண விவகாரத்தில் பாலேஷ் இந்த கொலையை நிகழ்த்தினார்.

ராஜேஷ் கொலை வழக்கில் போலீஸார் பாலேஷை மோப்பமிட்டதும், லாரி ஒன்றில் தனது உதவியாளர்களான பீகாரை சேர்ந்த இருவருடன் ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றார். ராஜஸ்தானில் அந்த லாரியையும் பீகார் தொழிலாளர்கள் இருவரையும் கொளுத்தி, தீ விபத்தாக ஜோடித்தார். ராஜஸ்தான் போலீஸார் அடையாளம் தெரியாது கருகிப்போன சடலங்களை கைப்பற்றி, லாரியின் பதிவெண் உதவியால் பாலேஷ் குடும்பத்தை அணுகினார்கள்.

லாரி விபத்தில் இறந்துபோனது பாலேஷ் என்றும், இன்னொரு சடலம் யாரென்று தெரியாது என்றும் பாலேஷ் குடும்பத்தினர் அடையாளம் காட்டினார்கள். இதனால் பாலேஷ் மீதான ராஜேஷ் கொலை வழக்கு கைவிடப்பட்டது. ஆனால் பாலேஷ் பஞ்சாப்புக்கு தப்பிச்சென்று அமன் சிங் என்ற போலி அடையாளத்தில் வாழ ஆரம்பித்தார். தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர், தனது பெயரிலான இன்சூரன்ஸ் மற்றும் கடற்படையின் பணப்பலன்களை மனைவி பெயரில் மாற்றம் செய்து அனுபவித்தார்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ்

சில ஆண்டுகள் கழித்து டெல்லியில் குடியேறி, ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வாழ்க்கையை ஓட்டினார். இப்படி 20 வருடங்கள் கழிந்த பிறகே, டெல்லி போலீஸாரின் விசாரணையில் அமன் சிங் என்ற பாலேஷ் தனது 60 வயதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மைத்துடன் ராஜேஷை கொன்றது, பீகார் தொழிலாளர்கள் இருவரை எரித்துக்கொன்றது, ஆள்மாறாட்டம், இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்றி பணப்பலன்களை பெற்றது இப்படி பல்வேறு புகார்களுக்கு ஆளாகி இருக்கும் பாலேஷை, டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!

சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்

பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!

தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in