வனத்துக்குள் செல்லாதீங்க... கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு! வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை!

  விலங்கின் கால் தடம்
விலங்கின் கால் தடம்

ஈரோடு அருகே கிராமத்திற்குள் புகுந்துள்ள மர்ம விலங்கை பிடிக்க 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, 3 இடத்தில் கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் அடுத்த கிழக்கு தலவுமலை பகுதியில் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிந்த கன்றுக்குட்டி ஒன்று மாயமானது. பிறகு அது தோட்டத்தின் ஒரு பகுதியில் இறந்துகிடந்தது. அதனை மர்ம விலங்கு ஒன்று இழுத்து சென்று கொன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, மர்ம விலங்கின் கால்தடத்தைச் சேகரித்துச் சென்றனர்.

அதன் அடிப்படையில் கன்றுக்குட்டியை இழுத்து சென்ற மர்ம விலங்கு சிறுத்தை புலி அல்லது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகித்துள்ள வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியைச் சுற்றிலும் 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். மேலும் சம்பவ நடந்த இடத்தில் 3 கூண்டும் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மர்ம விலங்கு பிடிபடும் வரை அந்த கிராமத்தினர் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தீர்த்த குமாரசாமி மலைக்கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அறச்சலூர், தலவுமலை, வெள்ளி வலசு உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in