மகனை தேடி அலைந்த பெற்றோர்.... கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை

மாணவர் குணால்
மாணவர் குணால்
Updated on
1 min read

கொங்கணாபுரம் அருகே கல்லூரி வளாகத்தில் இன்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே கோணங்கியூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் குணால் ( 21). இவர், திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கச்சுப்பள்ளியை அடுத்த எட்டிகுட்டைமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு  வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை  எட்டிகுட்டைமேடு அரசு பி.எட் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில்  குணால் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குணால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in