
தேனி மாவட்டம், கூடலூரில் பழுதான மின் வயரை சரி செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மின் வாரிய ஊழியர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூா் பத்து நோன்பு பள்ளிவாசல் தெருவைச் சேந்தவர் கேசவன் (45). இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சுருளிப்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று மின்சாரம் தடைப்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கூடலூர் வடக்கு போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!