கடலூர் மாவட்டத்தில் சாலையோரம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சேர்ந்தவர் பச்சமுத்து. இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் கணக்கிட்டு ஆய்வாளராக பணி செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பாளையங்கோட்டை மின் நிலையம் அருகேயுள்ள சாலையோரம் நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த எதிர்பாராத விதமாக பச்சமுத்து மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பச்சமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்த நண்பர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த அவர்கள், பச்சமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக சோழத்தரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்