பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய முன்னாள் அமைச்சர்... அமலாக்கத்துறை ரெய்டு ஆரம்பம்

பாஜக அமைச்சராக ஹரக் சிங் ராவத்
பாஜக அமைச்சராக ஹரக் சிங் ராவத்

பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் ராவத் மீது, 3 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனையை தொடங்கினார்கள்.

2022 உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கு சற்று முன்னதாக, ஹரக் சிங் ராவத் பாஜகவிலிருந்து காங்கிரஸ் முகாமுக்கு மாறினார். இதனையடுத்து ஹரக் சிங் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளை முன்வைத்து, மத்திய விசாரணை அமைப்புகள் அவர் மீது பாயும் என்ற அரசியல் கணிப்புகள் அங்கே பரவியிருந்தன. அதன்படி ஹரக் சிங் மீதான பணமோசடிப் புகார்கள் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை

இன்று அதிகாலை முதல் முன்னாள் அமைச்சர் ஹரக் சிங் தொடர்பான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வினை தொடர்ந்து வருகின்றனர். உத்தராகண்ட், சண்டிகர் மற்றும் டெல்லியில் உள்ள ஹரக் சிங் தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஹரக் சிங் ஈடுபட்டதாக பாஜக மாநில அமைச்சரவையிலிருந்தும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டிருந்தார். அவர் அரசியல் முகாம் மாறுவதால் இந்த நடவடிக்கை என்றும், அவர் மீதான சட்ட விரோத புகார்கள் தொடர்பான நடவடிக்கை என்றும் அப்போது பேசப்பட்டது.

பின்னர் அவர் காங்கிரஸ் முகாமுக்கு மாறினார். அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து மாநிலத்தின் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் நடந்ததாக கூறப்படும், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் தலைதூக்கின.

ஹரக் சிங் ராவத்
ஹரக் சிங் ராவத்

உத்தராகண்ட் மாநிலத்தின் பக்ரோ மற்றும் மோர்கட்டி ஆகிய வனப்பகுதிகளில் புலிகள் சபாரி மற்றும் கட்டுமானத் திட்டங்களில் ஹரக் சிங் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவை தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அமைக்கப்பட்ட கமிட்டி, உத்தராகண்டில் விசாரணை மேற்கொண்டு அப்போதைய வனத்துறை அமைச்சர் ஹரக் சிங் மற்றும் சில வனத்துறை உயர் அதிகாரிகளை குற்றவாளிகள் என அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வகையில் ஹரக் சிங் மீதான பணமோசடி புகாரில் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் அமலாக்கத்துறை விசாரணை இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in