கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 2 உயிரிழந்தனர். அதிகாலை நடந்த இந்த துயரம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். 5 பேரில் 2 பேர் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 3 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!