உஷார்... லிஃப்ட் சதியால் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலியான இளைஞர்!

லிஃப்ட் காரணமாக பலி
லிஃப்ட் காரணமாக பலி

லிஃப்ட் கோளாறு காரணமாக, அதனை நம்பியவர் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார். இந்த துயரச் சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.

ராஞ்சியில் வசிக்கும் சைலேஷ் குமார் என்பவர் லிஃப்ட் கோளாறு காரணமாக நான்காவது மாடியிலிருந்து தரைத்தளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார். அக்டோபர் 27 -ம் தேதி ராஞ்சியில் தான் வசித்த குடியிருப்பின் நான்காவது தளத்தில் சைலேஷ் குமார் லிஃப்ட்டுக்காக காத்திருந்தார். அவர் உடனடியாக தரைத்தளத்துக்கு போயாக வேண்டும். அந்த குடியிருப்பில் உள்ள லிஃப்ட் அடிக்கடி பழுதடையக் கூடியது என்பதால் சைலேஷ் சற்று பதற்றத்துடன் காத்திருந்தார்.

லிஃப்ட்
லிஃப்ட்

மேல்தளத்துக்கு சென்றிருக்கும் லிஃப்ட் தனது தளத்தை அடைவதற்காக, பொறுமையிழந்து லிஃப்ட் பொத்தானையும் அவ்வப்போது அழுத்தியபடி காத்திருந்தார். ஒரு கையில் செல்போனை நிரடியபடி, மறுபார்வையில் லிஃப்ட் கேபினை அவ்வப்போது நோட்டமிட்டபடி சைலேஷ் குமார் காத்திருந்தார். அப்போது அவர் காத்திருந்த நான்காவது தளத்தில், லிஃப்ட்டுக்கான கதவுகள் திடீரென அகலத்திறந்தன. உடனடியாக உள்ளே காலடி வைத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அங்கே லிஃப்ட் வந்திருக்கவில்லை.

சைலேஷ் குமார் சுதாரிக்கவோ, யோசிக்கவோ கூட அவகாசம் கிடைக்கவில்லை. லிஃப்ட் வராமலே அதற்கான கதவுகள் திறந்ததில், மேலும் கீழுமாக லிஃப்ட் பயணிக்கும் செங்குத்துப்பாதையில் தலைக்குப்புற விழுந்தார் சைலேஷ். லிஃப்ட் நிற்கும் அறைக்குள் பெரும் சத்தம் கேட்டதில் குடியிருப்பின் வாட்ச் மேன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து பார்த்தனர். அங்கே தலை சிதறி சம்பவ இடத்திலேயே சைலேஷ் குமார் இறந்திருந்தார்.

லிப்ட் பழுது
லிப்ட் பழுது

அவரை ஏமாற்றிய லிஃப்ட் நான்காவது தளத்தை அடையாது, 4 - 5 தளங்களுக்கு இடையே பழுதாகி நின்றுகொண்டிருந்தது. ராஞ்சி போலீஸார் விசாரணையில் நான்காவது தளத்தை லிஃப்ட் அடையும் முன்னரே, அதற்கான கதவுகள் திறந்ததே சைலேஷ் குமார் சாவுக்கு காரணம் என்பது உறுதியானது. எனினும் சந்தேக மரணம் என்பதன் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்த லிஃப்டுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், நகரில் பழுதடைந்த லிஃப்டுகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை சரிபார்க்கும்படி, அனைத்து அடுக்ககங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in