
கோத்தகிரி அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோழித்துறை குறும்பர் பழங்குடியினர் பகுதியில் வசித்து வருபவர் ரகுநாதன்(40). இவரது மனைவி ராணி (35). இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ரகுநாதன் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நேற்று மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரகுநாதன், மனைவி ராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த தனது கடைசி மகளை ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு மனைவியை அருகில் இருந்த பெரிய கட்டையால் அடித்துள்ளார். இதில் ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த அச்சத்தில் ரகுநாதனும், அருகில் இருந்த கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று, அருகில் இருந்தவர்கள் அவர்களது வீட்டிற்கு சென்று பார்க்கும் போது இருவரும் இறந்து கிடந்ததால், அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கோத்தகிரி போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிப்பழக்கத்தால், பெற்றோரை இழந்துவிட்டு, 3 குழந்தைகள் ஆதரவற்று நிற்பது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!
விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!
வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!
குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!