போதையால் நடந்த கோர விபத்து... 2 பேர் பலியான பரிதாபம்

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் குடிபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த கார் மோதி, தூய்மைப் பணியாளர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

தமிழகத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், சென்னை அண்ணாநகரில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சந்தோஷ், நாகசுந்தரம் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து
விபத்து

காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓடிய நிலையில், அந்த 2 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in