மதுபோதையில் விபரீதம்... 2வது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி!

மது
மது

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பேபி (30) இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில் ஒரு குழந்தை உள்ளது. மது போதைக்கு அடிமையான சுரேஷ் தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஏழு முறை மனைவி பேபி புகார் அளித்ததால் போலீசார் சுரேஷிடம் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.

மது
மது

நேற்று இரவும் வழக்கம் போல் வீட்டின் இரண்டாவது மாடியில் மது போதையில் இருந்த சுரேஷ் மனைவி பேபியிடம் தகராறில் ஈடட்டிருந்த போது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in