தலைக்கேறிய போதை... போலீஸாரிடம் ரகளைச் செய்த சிறுமியால் பரபரப்பு!

போதையில் ரகளை
போதையில் ரகளை

மது போதையில் சிறுமி ஒருவர் காவல்துறையினரிடம் ரகளை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவின் சர்ச் தெருவில் போதையில் சிறுமி ஒருவர் தள்ளாடியபடியே அங்கே கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் ஏராளமான பப்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன. மேலும் அந்த பகுதியில் உள்ள நோ பார்க்கிங் பகுதியில் சிறுமி தனது காரை நிறுத்தியுள்ளார். இதையடுத்து சிறுமி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் காவல்துறையினரை அந்த சிறுமி தாக்கியுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றனர். அப்போது, போலீஸாரைப் பார்த்து தகாத வார்த்தைகளால் சிறுமி திட்டியுள்ளார். இதன் பின்னர் அங்கு பெண் போலீஸார் ஒருவர் அழைக்கப்பட்டார். அவரையும் இந்த சிறுமி தள்ளிவிட ஆரம்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக மற்றொரு பெண்ணின் உதவியோடு ஆட்டோவில் சிறுமியை ஏற்றி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in