அதிர்ச்சி.. ரூ.300 கோடி மெபெட்ரான் போதைப்பொருள் பறிமுதல்... தொழிற்சாலையும் கண்டுபிடிப்பு!

தொழிற்சாலை
தொழிற்சாலை

நாசிக்கில் ரூ.300 கோடி மதிப்புள்ள 151 கிலோ மெபெட்ரான் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸார் சோதனை
போலீஸார் சோதனை

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் சட்டவிரோதமாக எம்.டி என்று அழைக்கப்படும் மெபெட்ரான் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தொழிற்சாலையை போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள 151 கிலோ மெபெட்ரான் போதைப்பொருளும், ஒரு துப்பாக்கியையும் போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக மும்பை சாகி நாகா பகுதியில் 12 பேரைகைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது
கைது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " ஜிஷான் இக்பால் ஷேக் என்பவரை முதலில் கைது செய்தோம். இதன் பின் மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலையில் மருந்துகளைத் தயாரிப்பதற்கான உரிமம் உள்ளது. ஆனால், அந்த தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரித்தது தெரிய வந்ததுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்" என்றனர்.

தொடரும் கடத்தல்

கடந்த 2015-ம் ஆண்டு ஒஷிவாராவில் உள்ள ஒரு ஓட்டலில் ரூ.30 கோடி மதிப்புள்ள மியாவ் மியாவ் எனப்படும் சுமார் 151.5 கிலோ மெபெட்ரானை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். மேலும், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள் மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் 405 கிலோ மெபெட்ரானை மீட்டு மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், சாங்லியில் உள்ள போலீஸ்காரர் ஒருவரின் வீட்டில் இருந்து 110 கிலோ மெபெட்ரானை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in