சென்னையில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் கைது! மும்பை போலீஸ் அதிரடி
மும்பையின் முக்கிய போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில் என்பவரை மும்பை தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்து, மும்பைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கடந்த அக்டோபர் 2ம் தேதி புனேவில் உள்ள சசூன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை அடுத்து மும்பை போலீஸார் போதைப்பொருள் கடத்தல் மன்னன் லலித்பாட்டிலை பிடிக்க 10 தனிப்படைகள் நாடு முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பாக லலித்பாட்டில் தப்பிச் செல்வதற்கு இரு தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனை அருகே அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 2.14 கோடி மதிப்புள்ள 1.71 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 கோடி மதிப்புள்ள 20 கிலோ மெப்பெட்ரோன் என்ற போதை பொருளை கடத்திய வழக்கில் லலித் பாட்டில் மற்றும் அவரது கூட்டாளிகளை மும்பை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் உத்தரபிரதேசத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை தயாரிக்கும் தொழிற்சாலையை உத்தரபிரதேச சிறப்பு தனிப்படையினருடன் சேர்ந்து மும்பை போலீஸார் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.
சொகுசு பார்ட்டிகளில் விற்கப்படும் இந்த வகையான போதைப்பொருள் மியாவ் மற்றும் மிஸ்டர் கேட் என்ற பல்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும் கடத்தல் மன்னன் லலித்பாட்டில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட லலித்பாட்டில் ஹெர்னியா பாதிப்பால் சசூன் அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லலித்பாட்டில் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் மும்பை போலீஸார் 10 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். மேலும் நேபாள எல்லையில் கடத்தல் மன்னன் லலித்பாட்டில் அண்ணன் பூஷன் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து லலித்பாட்டில் கூட்டாளிகளை கைது செய்து விசாரணை நடத்தியதில் லலித்பாட்டில் தொடர்ந்து புதிய செல்போன் எண்ணில் இருந்து கூட்டாளிகளை தொடர்பு கொண்டு வருவதை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் லலித்பாட்டில் செல்லும் இடங்களை பின்தொடரும் பொழுது குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாக இருந்தும் இறுதியாக அவர் சென்னையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் கூட்டாளிகளுடன் தங்கியிருப்பது மும்பை தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது.
இதனை அடுத்து மும்பை தனிப்படை போலீஸார் நேற்று சென்னையில் லலித்பாட்டிலை கைது செய்து மும்பைக்கு அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து போலீஸார் மும்பையின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனான லலித்பாட்டிலுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்த நபர் யார்? என்ன தொடர்பு என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!