தட்டிக்கேட்டவரின் விரலை கடித்துத் துப்பிய போதை ஆசாமி: களேபரமான ஊர் கூட்டம்!

தட்டிக்கேட்டவரின் விரலை கடித்துத் துப்பிய போதை ஆசாமி:
களேபரமான ஊர் கூட்டம்!

ஊர் கூட்டத்தில் தலைவர் தேர்வு குறித்து போதையில் ஆபாச பேசியவரைத் தட்டிக் கேட்டவரின் விரலைக் கடித்து துப்பியவர் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.


கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரானந்தபுரத்தில் ஊர் தலைவர் குறித்த கூட்டம் கோயில் அருகே நடந்துள்ளது. அப்போது குடிபோதையில் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து செல்வமணி என்பவர் ஆபாசமாக பேசியுள்ளார். இதை அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் தட்டிக் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வமணி, அவரது அண்ணன் மகன் அலெக்சாண்டர், உறவினர்கள் பூராசாமி, மூர்த்தி ஆகியோர் கண்ணனை உருட்டுக் கட்டையால் தாக்கினர்.

அப்போது செல்வமணியும், கண்ணனும் திடீரெனக் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். அதில் கண்ணனின் வலது கை கட்டை செல்வமணி கடித்துத் துப்பினார். இதனால் படுகாயமடைந்த கண்ணனை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வமணி உள்பட நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.