கடலில் கரை ஒதுங்கிய இளைஞர் மரணத்தில் திருப்பம்

போதை மாத்திரை விற்பனை தகராறில் நண்பர்கள் கொலை செய்து கடலில் வீசியது அம்பலம்.
கடலில் கரை ஒதுங்கிய இளைஞர் மரணத்தில் திருப்பம்

கார்த்திக் (25) என்பவர், நேற்று (07-09-2021) மதியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடுவர் முன்பு ஆஜரானார். பட்டினப்பாக்கம் கடற்கரை மணற்பரப்பில் ஒதுங்கிய மகேஷ்வரன் தனக்கு நண்பர் என்றார்.

மகேஷ் உட்பட 5 பேர் கடந்த மாதம் 4-ம் தேதி இரவு ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மகேஷ்வரனை அடித்துக் கொன்றுவிட்டு உடலை கடலில் தள்ளிவிட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார். நடுவர், சிறிது நேரம் வெளியே நிற்குமாறு கார்த்திக்கிடம் கூறினார். வெளியே வந்த கார்த்திக் அங்கிருந்து திடீரென மாயமானார்.

இது தொடர்பாக சைதாப்பேட்டை காவலர்கள் அளித்த தகவலின் பேரில், சரணடைய வந்து தப்பி ஓடிய கார்த்திக்கைத் தீவிரமாகத் தேடிப் பின்னர் கைது செய்தனர்.

கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில், மகேஷ்வரன் குடும்பத்தினர் கடந்த 6 வருடத்துக்கு முன்பு இந்தப் பகுதியில் குடியேறியது தெரியவந்தது. மகேஷ்வரன் தங்களுடன் பழகியதால், போதைக்கு அடிமையாகி அடிக்கடி போதை மாத்திரைகள் உட்கொள்ளும் பழக்கம் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் போதை மாத்திரைகளை வாங்கி சப்ளை செய்யும் தொழில் செய்து வந்ததாகக் கூறினார். மகேஷ்வரனிடம், ”எங்கிருந்து மாத்திரைகள் வாங்கி விற்பனை செய்கின்றாய்” எனக் கேட்டதற்கு மகேஷ்வரன் தகவல் கூற மறுத்திருக்கிறார்.

செப்டம்பர் 4-ம் தேதி இரவு தனது நண்பர்கள் 5 பேருடன் மகேஷ்வரனின் வீட்டுக்கு கார்த்திக் சென்றிருக்கிறார். அங்கு அவரை அடித்து உதைத்துக் கடத்தி சென்றுள்ளனர். போதை மாத்திரை வாங்கும் கடையைக் கேட்டு அடித்து கத்தியால் வெட்டியதில், மகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறினார். இதைத் தொடர்ந்து வேறுவழியின்றி மகேஷ்வரனை பட்டினப்பாக்கம் கடற்கரையில் வீசிச் சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கார்த்திக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு நண்பரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள கும்பலைப் பிடிக்க 5 தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.

கடலில் கரை ஒதுங்கிய இளைஞர் மரணத்தில் திருப்பம்
சென்னையில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in