2 குழந்தைகளின் தாய்க்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய கார் டிரைவர்... வலைவீசி தேடும் போலீஸ்!

ஆன்லைன் கேப் புக்கிங்
ஆன்லைன் கேப் புக்கிங்
Updated on
1 min read

பெங்களூரு நகரைச் சேர்ந்தவர் இளம்பெண். 32 வயதான இவருக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 9 மாதக் குழந்தையும் உள்ளனர். கடந்த 9-ம் தேதி தனது மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர இளம்பெண் சென்றதாக தெரிகிறது.

அப்போது, வீட்டிற்கு திரும்ப ஆட்டோ கிடைக்காததால் ஆப் மூலம் கார் புக் செய்துள்ளார். ஆனால், கேப் வர தாமதமானதால், புக்கிங்கை கேன்சல் செய்த அந்த பெண் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த தினேஷ் என்ற அந்த கார் டிரைவர் போன் செய்து எப்படி புக்கிங்கை கேன்சல் செய்யலாம் என்று கேட்டு ரகளை செய்துள்ளார்.

குழந்தை அழத்தொடங்கியதால், கார் புக்கிங்கை கேன்சல் செய்ததாக அந்த பெண் கூறியதை ஏற்காத டிரைவர் தினேஷ். பழிவாங்கும் நோக்குடன் அந்த பெண்ணிற்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களையும் அனுப்பியதாக தெரிகிறது.

தொடர்ந்து செல்போனில் ஆபாச வார்த்தைகளால் பேசியும் உள்ளார். இதையடுத்து, அந்த படங்களை உடனடியாக போலீஸில் கொடுத்து புகார் அளிக்க உள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார். இதனால், சுதாரித்த தினேஷ் அனுப்பிய படங்களை அழித்ததோடு, போன் செய்வதையும் நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், ஆப் மூலம் கார் புக் செய்த தன்னுடைய நம்பர் எப்படி டிரைவருக்கு தெரியவந்தது என்று அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரு நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in