டிக்கெட் எடுக்கச் சொன்ன பஸ் நடத்துநரை அடித்துக் கொன்ற வாலிபர்: சென்னையில் ஓடும் பேருந்தில் பயங்கரம்!

டிக்கெட் எடுக்கச் சொன்ன  பஸ் நடத்துநரை அடித்துக் கொன்ற வாலிபர்: சென்னையில் ஓடும் பேருந்தில்  பயங்கரம்!

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநரை போதை வாலிபர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 5.40 மணிக்கு அரசு பேருந்து சென்றது. மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மது போதையில் மர்மநபர் வாலிபர் பேருந்தில் ஏறியுள்ளார். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நடத்துநர் பெருமாள் (54) அவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

ஆனால், டிக்கெட் எடுக்க முடியாது என அந்த வாலிபர் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதை சக பயணிகள் தடுத்தனர். ஆனால், போதை வாலிபர் தாக்கியதில் நடத்துநர் பெருமாள் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மேல்மருத்துவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து போதை வாலிபரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.