நக்சல்கள் பதிலடி தாக்குதல்... பாதுகாப்பு படை வீரர் படுகாயம்!

பயிற்சி களத்தில் நக்சல்கள்
பயிற்சி களத்தில் நக்சல்கள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படை காவலர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது நக்சல்கள் நடத்திவரும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களால் பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைவது மற்றும் உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று கடமல்லி கிராமத்தின் அருகே கண்காணிப்பு பணியை முடித்துவிட்டு மையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த காவலர் ஒருவர் மீது நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.

மாவட்ட ரிசர்வ் காவல் படையில் பணியாற்றும் சனு ஹம்லா இந்த வெடிவிபத்தில் கைகள் மற்றும் கண்களில் பலத்த காயமடைந்து தற்போது பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சல் தேடுதல் வேட்டை
நக்சல் தேடுதல் வேட்டை

முன்னதாக நக்சலைட்களுடன் நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் இரண்டு பெண் நக்கல்கள் தண்டேவாடா பகுதியில் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் இந்த தாக்குதல்களை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மண்டல காவல்துறை தலைவர் பஸ்டர் பி. சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே போல் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in