
உத்தரபிரதேச மாநிலத்தில் வெறிநாய் கடித்ததில் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் அக்ராவை அடுத்த பாஹ் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் கடித்துள்ளது. இதனை சிறுமி தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாயார் வீட்டில் சிகிச்சை செய்து சாதாரணமாக விட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2 இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்ததாகத் தெரிகிறது. அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று காலமானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெறி நாய் கடித்தால் மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.