
’’மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’’ என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ‘’மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடைய வேண்டாம், உங்கள் மின் கட்டண நிலைப்பாடு சரி பார்க்கவும், மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம், அவர்கள் பணத்தை அனுப்புமாறு கூறி அனுப்பும் இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம், உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும் என்று எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற மோசடி எஸ்எம்எஸ் மூலம் வரும் லிங்கைத் தொட்டால் அதன்மூலம் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே அந்த லிங்கை தொட வேண்டாம்.
இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால், http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம். அல்லது @tncybercrimeoff என்ற டிவிட்டர் பக்கத்திலும் புகார் அளிக்கலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!